சென்னை: வள்ளலாரின் பிறந்தநாளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது எக்ஸ் வலைதளத்தில் புகழாரம் சூட்டியுள்ளார். அதில்; பிறப்பால் சாதி வேறுபாடு காண்பதைக் கண்டித்து, எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் என்ற புரட்சித் துறவி வள்ளலாருக்கு இன்று 200ஆம் ஆண்டு பிறந்தநாள்!
சூழ்ச்சிகளால் வரலாற்றை திரிப்பவர்கள், எவ்வளவு முயற்சித்தாலும் வள்ளலார் என்றுமே சமத்துவத்தின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்வார் என்று அமைச்சர் உதயநிதி புகழாரம் சூட்டினார்.
உலகில் சகல துன்பங்களுக்கும் காரணம் பசிக்கொடுமை தான் என்றுணர்ந்த வள்ளலார் வடலூரில் அன்று மூட்டிய அணையா அடுப்பின் நெருப்பு ஒளி தான் இன்று பள்ளிகளில் காலை உணவு திட்டம் என பரந்திருப்பதாக உதயநிதி பெருமிதம் தெரிவித்தார். வள்ளலாரின் புரட்சிக் கருத்துகளை உலகறிய செய்வோம். நாமும் கடைப்பிடிப்போம். என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.