கடலூர் : கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். சத்திய ஞான சபை அருகே ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க அரசு அடிக்கல் நாட்டியது. சர்வதேச மையம் அமைய உள்ள பகுதி தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து சர்வதேச மையம் அமைய உள்ள இடத்தில் மாநில தொல்லியல் துறையினர் 2 மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர். வழக்கு விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மத்திய தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.