சேலம் : வாழப்பாடி அருகே கத்திரிப்பட்டியில் ரசாயனம் ஊற்றி தென்னை மரத்தை அழித்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கத்திரிப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் அவரது பக்கத்து நில உரிமையாளருக்கும் வரப்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சந்தோஷ் நிலத்தில் உள்ள தென்னை மரங்களுக்கு ரசாயனம் கலந்த கலவையை ஊற்றி அழித்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை அடுத்து குமரவேல், பிரபாகரன், கார்த்திக் ஆகியோரை ஏத்தாப்பூர் போலீசார் கைதுசெய்தனர்.
வாழப்பாடி அருகே ரசாயனம் ஊற்றி தென்னை மரத்தை அழித்ததாக 3 பேர் கைது
0