புதுடெல்லி: முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி தன் டிவிட்டர் பதிவில், “வாஜ்பாய் தேசத்தை கட்டியெழுப்ப தன் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அவரது அர்ப்பணிப்பும், சேவையும் 2047 சுதந்திரத்தின் நூற்றாண்டை கொண்டாடும் வரை நமக்கு உத்வேகம் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், கல்வியாளருமான மதன் மோகன் மாளவியா பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி தன் டிவிட்டர் பதிவில், “மாளவியாவின் ஒப்பற்ற ஆளுமையும், பணியும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் உத்வேகம் அளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
வாஜ்பாய், மதன்மோகன் மாளவியா பிறந்த நாள்
140
previous post