சென்னை: தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பதற்கு எதிராக ஆணையத்தில் மேல்முறையீடு செய்வோம் என கர்நாடகா கூறியதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒப்புதல் பெறுவோம் என கர்நாடக அரசு கூறியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வறட்சி காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் வழிகாட்டுதல்கள் உள்ளன. உத்தரவுகளை ஏற்காமல் கர்நாடக அரசு அலட்சியப்படுத்தி வருவதால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.