சென்னை: வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபைக்கு சொந்தமான 27 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண சிறப்புக் குழு அமைக்க கடலூர் ஆட்சியருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களை அடையாளம் கண்டு அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடர்ந்த வழக்கு செப்.5-க்கு ஒத்திவைக்கப்பட்டது.