Tuesday, April 23, 2024
Home » வடை சுடுவதிலும், நடிப்பிலும் நம்பர்1; கஜினி முகமது போல எத்தனை முறை வந்தாலும் மோடிக்கு ‘நோ சான்ஸ்’: செல்லூர் ராஜூ ‘கலாய்’

வடை சுடுவதிலும், நடிப்பிலும் நம்பர்1; கஜினி முகமது போல எத்தனை முறை வந்தாலும் மோடிக்கு ‘நோ சான்ஸ்’: செல்லூர் ராஜூ ‘கலாய்’

by MuthuKumar

மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட முத்துப்பட்டியில் அங்கன்வாடிக்கான பூமி பூஜையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று கலந்து கொண்டார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அகில இந்திய கட்சியே வேண்டாம் என்று சொல்லியுள்ள கட்சி தான் அதிமுக. எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விபரங்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிடுவது போல தெரிகிறது. தேர்தல் பத்திர விவகாரத்தில் நாங்கள் பயப்படவில்லை. அதிமுக கூட்டணிக்கு வாங்க என நாங்கள் யாரையும் கூப்பிடவில்லை. பாஜவையே வேண்டாம் என்று சொன்னவர்கள் நாங்கள். வாயிலேயே வடை சுடுவதில் இந்திய அளவில் மோடி முதலிடத்தில் உள்ளார். தமிழ்நாட்டை ஒரு தளமாக வைத்து, ராமேஸ்வரம் பகுதிகளில் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதால் அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

பிரதமர் மோடி நன்றாக நடிக்கிறார். அவர்கள் கட்சி தலைவர்களான வாஜ்பாய், அத்வானிக்கு மாற்றாக அதிமுக தலைவர்களின் புகழை பாடுகிறார். அதிமுகவுக்கு ஓட்டு போடும் மக்களை ஏமாற்ற மோடி முயற்சிக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் கெட்டிக்காரர்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. கஜினி முகமது போல பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு படையெடுத்தாலும் சரி. பாஜ கட்சியை மக்கள் ஏற்க மாட்டார்கள். அதிமுகவினரும் பாஜவிற்கு ஓட்டு போட மாட்டார்கள். பாஜ மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. அரசியல் இயக்கத்தில் மதம் கலக்கக் கூடாது. பாஜ ஒரு மதத்தை முன்னோக்கி எடுத்து செல்கிறது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் காலம் தொட்டு எந்த காலத்திலும் தமிழ்நாட்டு மக்கள் மத அரசியலை ஏற்க மாட்டார்கள். ராமர் கோவில் கட்டுவதை குறை சொல்லவில்லை. பாஜ ராமரை வைத்து பெரிய அரசியல் செய்கிறார்கள். அதை மக்கள் மத்தியில் பிரசாரமாக எடுத்து செல்ல கூடாது. பல மொழி பேசும் நாடு இது. ஆனால் பாஜ இந்தி மொழி ஒன்றே வேண்டுமென்று சொல்கிறார்கள். பாஜவினர் நடைபயணம் சென்றாலும் சரி. உருண்டு சென்றாலும் சரி. தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்கள் தான் எஜமானர்கள். எந்த கட்சியில் உறுப்பினர்கள் அதிகமாக உள்ளனர். தொண்டர் பலம் எந்த கட்சியில் உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் என்பதும் ஒரு அரசியல் நாடகம் தான். தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்த பிரதமர் ஏன் இந்த கட்டுமானம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. எப்படியாவது மருத்துவமனையை கட்டி முடித்தால் சரி தான். இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi