காஞ்சிபுரம்: நரப்பாக்கம் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின்பேரில் நேற்று (ஜூலை2) தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் பணி தொடக்க விழா நிகழ்ச்சி காஞ்சிபுரத்தை அடுத்த விஷார் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட நரப்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்றது. மருத்துவர்கள் ஜெய் ஆனந்த், சிவப்பிரகாசம் ஆகியோர் தலைமை தாங்கினர். கால்நடை பராமரிப்புத்துறை காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குநர் மைதீன் பாத்திமா முகாமை தொடங்கி வைத்தார். கோட்ட உதவி இயக்குநர் ராஜன், மண்டல நோய் புலனாய்வு உதவி இயக்குநர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழு தடுப்பூசி பணியினை மேற்கொண்டனர்.இந்த முகாமில் நரப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 600 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
நரப்பாக்கம் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
0