சென்னை: மின்சார வாரிய காலி பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மின்வாரிய கேங்மேன் சங்கத்தினர் நாளை அறிவித்துள்ள ஸ்டிரைக்கை எதிர்த்த பொதுநல வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இன்று மதியம் 2.15க்குள் பதிலளிக்குமாறு மின் பகிர்மான கழகத்திற்கு உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது.