சென்னை: கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதளப்பதிவு: ஆங்கிலேயரின் பொருளாதார சுரண்டலுக்கு எதிராக கப்பலோட்டி, சிறையில் வாடிய ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உ.சிதம்பரனார் புகழ் வாழ்க! நாட்டுத் தொண்டும் – மொழித் தொண்டும் தனது இரு கண்கள் என வாழ்ந்திட்ட அந்த பெருமகனாரின் தியாக வாழ்வை, இளைஞர்களுக்கு பயிற்றுவித்து அவரது பெருமையைப் போற்றுவோம்! இவ்வாறு பதிவிட்டுள்ளார்.