லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது லாரி மோதி கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலத்துக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சாலையோரம் ஓட்டல் ஒன்றில் நின்றிருந்தது. பேருந்து மீது லாரி மோதியதில் 11 பக்தர்கள் உயிரிழந்தனர்; மேலும் 10 பேர் காயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த பக்தர்கள் சீதாப்பூர் மாவட்டம் ஜெதா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது லாரி மோதி கவிழ்ந்ததில் 11 பேர் பலி
117