டெல்லி: உத்தரபிரதேசம் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து காங்கிரஸ் சார்பில் நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி அப்பதவியில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு பதிலாக உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் அல்லது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரிக் அன்வருக்கு அப்பதவி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.