உத்தரப்பிரதேசத்தில் டபுள் டெக்கர் பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர். 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எட்டாவாவில் ஆக்ரா – லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு சென்ற இரட்டை அடுக்கு பேருந்து நள்ளிரவு 12:30 மணியளவில் கார் மீது மோதியது.