உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானி தோல்வியடைந்துள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் ஷர்மா வெற்றி பெற்றுள்ளார். அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் கிஷோரி லால் சர்மாவை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் ஸ்மிருதி இரானி 1,18,471 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். கிஷோரி லால் சர்மா முன்னிலை வகிக்கிறார்.
ராகுல் காந்தி 2004 முதல் 2019 வரை உத்தரப் பிரதேசத்தில் உள்ள அமேதி மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். காங்கிரஸ் தலைவர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக 55,102 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார். அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தலைவரை விட காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதால் அமேதி தொகுதியில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது.