உத்தராகண்ட்: உத்தராகண்ட் உத்தர்காசியில் சுரங்க விபத்து நடந்த இடத்தை முதல்வர் புஷ்கர் சிங் தாமி பார்வையிட்டார். சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களுடன் பேசியதாகவும், மீட்புப் பணிகள் நடைபெறுவதாகவும் முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிக்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்ததாக முதல்வர் புஷ்கர் சிங் பேட்டி அளித்துள்ளார்.