உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது. 4.5 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் வழியாக செலுத்தப்பட்டு வருகின்றன.









