உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் குளிர்காலத்தை முன்னிட்டு பிரசித்திபெற்ற கேதார்நாத் கோயில் நடை அடைக்கப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயில் இனி 6 மாதங்களுக்கு பிறகே திறக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு யாத்திரை காலத்தில் 16.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். உத்தராகண்டில் அமைந்துள்ள மற்றொரு கோயிலான பத்ரிநாத் கோயில் நடை நவம்பர் 17ம் தேதி அடைக்கப்பட உள்ளது.
உத்தரகாண்ட் கேதார்நாத் கோயில் நடை அடைப்பு
0