காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோயிலில் சமீபத்தில் 2 உற்சவர் சிலைகள் திருடு போயின. இது குறித்து கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, காஞ்சிபுரம் புதுப்பாளையம் தெருவை சேர்ந்த குமரேசன் மற்றும் சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சிறுகாவேரிப்பாக்கம் முனீஸ்வரன் திருக்கோயில் குளத்தில் மறைத்து வைத்திருந்த சிலைகளை மீட்டனர். பின்னர், இருவர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் போலீசார் அடைத்தனர்.
உற்சவர் சிலைகளை திருடியவர்கள் கைது
previous post