துபாய்: இஸ்ரேல் ஈரான் போர் முடிவுற்று 2 நாள்கள் கடந்த நிலையில் ஈரானின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி காமெனி முதன்முறையாக பேசிய விடியோ ஈரான் அரசு தொலைக்காட்சியில் வௌியானது. அதில் பேசிய அயதுல்லா அலி காமெனி, “இந்த போரில் அமெரிக்காவை ஈரான் வென்று விட்டது.
கத்தாரில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்தது. ஆனால் அமெரிக்கா மீண்டும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த கூடும். அதற்கு அமெரிக்கா அதிக விலை கொடுக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.