புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியை உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், சாட்ஜிபிடி நேற்று பல நாடுகளிலும் முடங்கியது. இந்தியா மற்றும் அமெரிக்காவில் அதிகளவில் புகார்கள் பதிவாகி உள்ளன. இந்தியாவில் மாலை 3 மணி அளவில் மட்டும் 800க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகி உள்ளன.
இதில் 88 சதவீதம் பேர் சாட்ஜிபிடி கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் 8 சதவீதம் பேர் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் புகாரளித்துள்ளனர்