கவுன்சில் புளூஃப்ஸ்: யுஎஸ் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட இந்தியாவின் லக்ஷயா சென் தகுதி பெற்றார். காலிறுதியில் சக வீரர் சங்கர் முத்துசாமியுடன் (19 வயது, 80வது ரேங்க்) மோதிய லக்ஷயா (21 வயது, 12வது ரேங்க்) 21-10, 21-17 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 38 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. அரையிறுதியில் சீன வீரர் ஷி ஃபெங் லீ (23 வயது, 7வது ரேங்க்) உடன் சென் மோத உள்ளார். சமீபத்தில் நடந்த கனடா ஓபன் பைனலில் லீயை வீழ்த்திதான் சென் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் காலிறுதியில் சீன வீராங்கனை ஃபாங் ஜி காவுடன் (24வயது, 36வது ரேங்க்) மோதிய இந்தியாவின் பி.வி.சிந்து (28வயது, 12வது ரேங்க்) 20-22, 13-21 என நேர் செட்களில் தோற்று வெளியேறினார். இப்போட்டி 49 நிமிடங்களுக்கு நீடித்தது.