நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. இதில் யார், யாருடன் மோதுவது என்பதை தேர்வு செய்ய குலுக்கல் முறை நேற்று நடந்தது. இதில் ஆடவர் ஒற்றையரில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், முதல் சுற்றில் அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொள்கிறார். செர்பியாவின் ஜோகோவிச், மால்டோவாவின் ராடு ஆல்பட் சந்திக்கிறார்.
மகளிர் ஒற்றையரில் நம்பர் 1 வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷ்யாவின் கமிலா ரக்கிமோவாவுடனும், பெலாரசின் அரினா சபலென்கா, ஆஸ்திரேலியாவின் பிரிசில்லாவுடனும் மோத உள்ளனர். 17வது ரேங்க் வீராங்கனையான துனிசியாவின் 29 வயதான ஓன்ஸ் ஜபீர், முதல் சுற்றில் ரஷ்யாவின் வெரோனிகா குடெர்மெடோவாடன் மோத இருந்த நிலையில், தோள்பட்டை காயம் காரணமாக விலகினார்.