வாஷிங்டன்: அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் வெளியிட்ட பதிவில், ‘இந்தோ – பசிபிக் பிராந்திய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன். அப்போது ஜப்பான், தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளுக்கு செல்கிறேன். எனது முதல் பயணம் ஹொனலுலுவில் இருந்து தொடங்குகிறது.
எனது பயணங்களை முடித்துக் கொண்டு வாஷிங்டன் திரும்பும் வழியில் பிரான்ஸ் செல்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின்னர் முதன் முறையாக வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி ஒருவர் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும்.