சான் ஜோஸ்: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் மற்றும் மத்திய ஆசியாவை சேர்ந்தவர்களுக்கு பாலமாக செயல்படுவதற்கு கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் அதிபர் ரோட்ரிகோ சாவஸ் ரோபல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் 200பேர் கொண்ட முதல் குழுவானது புதனன்று (இன்று) ஜூவான் சாண்டரியா சர்வதேச விமான நிலையத்தினை வந்தடையும். இவர்களை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவதில் அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கு கோஸ்டாரிகா அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இவர்கள் மத்திய ஆசியா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்கள் சொந்த நாடுகளை அடைவதற்கான பாலமாக கோஸ்டாரிகா செயல்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே 332 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களை ஏற்க கோஸ்டா ரிகா ஒப்புதல்
0