புதுடெல்லி: இந்தியா-அமெரிக்கா நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறைகளின் ஒத்துழைப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகளின் மேம்பாட்டிற்கு உதவ டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 5வது இந்தியா-அமெரிக்கா 2 பிளஸ் 2 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்கின்றனர்.
இதில் இரு தரப்பு பிரச்னைகள், பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான முன்னுரிமை, குவாட் உள்ளிட்ட கட்டமைப்புகள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா வந்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வரவேற்றார்.