வவாஷிங்டன்: நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் 51 சதவீத வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற 270 எலக்டோரல் வாக்குகள் தேவைப்படும் நிலையில், 277 எலக்டோரல் வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 47ஆவது அதிபராக டிரம்ப் தேர்வாகியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று அதிகாலை நிறைவு பெற்றவுடன், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து முன்னிலை வகித்த டிரம்ப் கட்சி பெரும்பான்மை பலத்தை எட்டியது. கமலா ஹாரிசின் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டிரம்பின் வெற்றி உறுதியானதை தொடர்ந்து இந்திய பங்குசந்தைகள் ஏற்றம் கண்டனர். பல்வேறு கருத்துகணிப்புகளில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் இந்திய பங்குசந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகள் திரும்ப பெறப்பட்டன. ஆனால் கருத்துகணிப்புகளை பொய்யாக்கி டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
உலக வல்லரசு நாடுகளின் முதன்மையான நாடான அமெரிக்காவின் 47வது அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட்டனர். இதில் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபரானார். துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பதவியேற்றார். இந்நிலையில் தற்போதைய அதிபர் தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட்டனர். துணை அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் ஜே.டி.வான்சும், ஜனநாயகக் கட்சி டிம் வால்சும் போட்டியிட்டனர்.
ஆரம்பம் முதலே கமலா – டிரம்ப் இடையே வாக்கு சேகரிப்பில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் நேற்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. சுமார் 95 சதவீத இடங்களில் வாக்குச்சீட்டு நடைமுறையிலும், மீதமுள்ள 5 சதவீத இடங்களில் மின்னணு முறையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளதால், வாக்குப்பதிவு நாளுக்கு முன்பே 8.2 கோடி பேர் வாக்களித்துவிட்டனர். அதாவது 40 சதவீதம் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்கை செலுத்திவிட்டனர். மீதமுள்ள வாக்காளர்கள் நேற்று தங்கள் வாக்கை செலுத்தினர்.
இன்று அதிகாலை வாக்கு பதிவு நிறைவு பெற்றவுடன், உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடர்ந்து முன்னிலை வகித்த டிரம்ப் கட்சி 277 எலக்டோரல் வாக்குகளை பெற்றது. 270 எலக்டோரல் வாக்குகள் பெற்றால் வெற்றி என்ற நிலையில், 51 சதவீத வாக்குகளை பெற்று குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப் வெற்றி பெற்றதால் இந்திய வம்சாவளி பெண் கைலா வெபரின் கணவரான ஜே.டி.வான்ஸ் துணை அதிபராகிறார்