வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸில் மிக நீண்ட நேரம் நடந்த போட்டி என்ற பெருமையை டான் எவன்ஸ் பங்கேற்ற ஆட்டம் பெற்றது. டான் எவன்ஸ் – கச்சானோவ் இடையே நடந்த ஆட்டம் 5 மணி 35 நிமிடங்கள் நீடித்தது. இதற்கு முன்பு 1992-ம் ஆண்டு ஸ்டீவன் எட்பெர்க், மைக்கேல் சாங் மோதிய போட்டிதான் மிக நீண்ட நேரம் நடந்த போட்டியாகும். அமெரிக்க ஓபனில் 1992-ம் ஆண்டு நடந்த போட்டி 5 மணி 25 நிமிடங்கள் வரை நீடித்தது.