அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளது. அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை நடத்திய ஆய்வு ஒன்றில் சட்ட விரோத நுழைவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவில் உள் நுழைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.