டொரந்தோ: கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து எஃகு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வரிகளை விதித்தார். இதற்கு பதிலடியாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது டிஜிட்டல் சேவை வரியை விதிப்பதாக கனடா அறிவித்தது. இதனைதொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கனடாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக வெள்ளியன்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான டிஜிட்டல் சேவை வரி நேற்று அமலாக்கப்பட இருந்த நிலையில் இந்த வரியை கனடா ரத்து செய்துள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ”வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்பார்த்து, டிஜிட்டல் சேவை வரியை கனடா ரத்து செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்கா- கனடா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக பிரதமர் மார்க் கார்னே தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை தொடக்கம்: பிரதமர் கார்னே தகவல்
0