கூடுவாஞ்சேரி: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வல்லாஞ்சேரி ஆகிய பகுதிகளில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதில், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை ஓரத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கிருந்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளுக்கும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கும் வந்து வெளியூர்களுக்கு சென்று வரும் பொதுமக்கள் வண்டலூர் மற்றும் கண்டிகை ஆகிய பகுதிகளில் தினந்தோறும் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.எனவே, ஊரப்பாக்கம்-நல்லம்பாக்கம் சாலையை 4 வழி சாலையாக அகலப்படுத்தினால் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள பொதுமக்கள் சாலையில் எளிதில் சென்று வரலாம்.