சென்னை: உருது ஆசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் உருது ஆசிரியர் நியமனத்துக்கு ஒப்புதல் தர பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்யப்பட்டது. திருப்பத்தூர் மதரஸா-இ-அசாம் அரசு உதவி பெறும் தொடக்க பள்ளியில் உருது ஆசிரியராக ஹாஜிரா 2022ல் நியமனம் செய்யப்பட்டார். ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவில்லை எனக் கூறி, ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து 2023ல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்தார். உத்தரவை ரத்து செய்யக் கோரி பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட் விசாரித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என நியமனத்துக்கு ஒப்புதல் தர ஐகோர்ட் ஆணை பிறப்பித்தது. நியமனத்துக்கு ஒப்புதல் தர வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடக்கக் கல்வி இயக்குநர் மேல்முறையீடு செய்தார். அபராதத்தை ஹாஜிரா நியமனத்துக்கு ஒப்புதல் தர மறுத்து உத்தரவிட்ட அதிகாரியின் மேல்முறையீட்டு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து ஐகோர்ட் உத்தரவிட்டது. அபராதத் தொகையை 4 வாரத்துக்குள் பள்ளிக்கு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உருது ஆசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு..!!
0