சென்னை: யுபிஎஸ்சி முதன்மை தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் இலவச பயிற்சி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் (யுபிஎஸ்சி) 2025ம் ஆண்டிற்கான முதன்மை தேர்வு பயிற்சிக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் முழுமையான பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. அனைத்து விண்ணப்பதாரர்களும் பயிற்சியில் கட்டணமில்லா உண்டு உறைவிட வசதியுடன் சேர்ந்து பயில வாய்ப்பு பெறுவர். விரிவான அறிவிப்பு அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.civilservicecoaching.com) விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி முதன்மை தேர்வு அனைவருக்கும் இலவச பயிற்சி
0