சென்னை: UPSC தேர்வுக்குத் தமிழகத்தில் இருந்து தயாராகும் மாணவருக்கு நான்முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம் கொடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நான்முதல்வன் திட்டம் பெரும் ஊக்கமாக அமைந்துள்ளதை அவர்களுடனான கலந்துரையாடலில் உணர முடிந்தது. நான்முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று 2024 IFoS பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பாராட்டினேன். கடந்த முறை தேர்ச்சி பெற இயலாதவர்கள் சோர்ந்து போகாதீர்கள். இந்த ஆண்டு இன்னும் சிறப்பாகத் தயாராகி, எட்டி விடும் தொலைவில் உள்ள வெற்றிக்கோட்டைத் தொட்டுவிடுங்கள் என்று முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
UPSC தேர்வுக்குத் தமிழகத்தில் இருந்து தயாராகும் மாணவருக்கு நான்முதல்வன் திட்டம் பெரும் ஊக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!!
0
previous post