கன்னூஜ்: உத்தரப்பிரதேசத்தின் கன்னூஜ் மாவட்டத்தின் சவுரிக் காவல்நிலையத்தின் சபுனா சோதனை சாவடியில் பொறுப்பாளராக உதவி ஆய்வாளர் ராம்கரி பால் இருந்து வந்தார். இந்நிலையில் இவர் 5 கிலோ உருளைக்கிழங்கை லஞ்சமாக கேட்கும் ஆடியோ வைரலாகி உள்ளது.
இந்த ஆடியோவில் தனது வழக்கை முடித்து வைப்பதற்காக ஒருவர் உதவி ஆய்வாளரிடம் கெஞ்சுகிறார். அதற்கு ராம்கரி பால் 5 கிலோ உருளை கிழங்கை தருமாறு கட்டாயப்படுத்துகிறார். இந்த ஆடியோ வைரலான நிலையில் உதவி ஆய்வாளர் ராம்கிரிபால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.