பரூக்காபாத்: உத்தரப்பிரதேசத்தில் காஸ்கஞ்சில் இருந்து பரூக்காபாத் நோக்கி பயணிகள் ரயில் நேற்று முன்தினம் இரவு சென்றுகொண்டு இருந்தது. பாடாசா ரயில்நிலையம் அருகே ரயில் வந்தபோது தண்டவாளத்தில் கிடந்த மரத்தின் மீது ரயில்மோதியது. இதனையடுத்து ரயில் ஓட்டுனர் அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயமேற்படவில்லை.இந்த சம்பவத்தை அடுத்து போலீசார், ரயில்வே அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ரயில் என்ஜினில் சிக்கியிருந்த மரம் அகற்றப்பட்டது. இதனை தொடர்ந்து ரயில் அங்கிருந்து பரூக்காபாத் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.