பக்ரைச்: உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஒன்றரை மாதத்தில் ஓநாய் தாக்கியதில் 8பேர் பலியாகி உள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் பக்ரைச் மாவட்டத்தில் கரேதி குருதத் சிங் கிராமத்தில் இரண்டரை வயது பெண் குழந்தை தனது தாயுடன் வீட்டிற்கு வெளியே உறங்கி கொண்டு இருந்ததாக தெரிகிறது. அப்போது ஓநாய் ஒன்று குழந்தையை இழுத்துச்சென்றுள்ளது. குழந்தைகளின் கைகள் சிதைந்த நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் குழந்தையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதேபோல் மவ்ஜா கோடியா கிராமத்தில் நேற்று அதிகாலை வீடு ஒன்றினுள் நுழைந்த ஓநாய் 70வயது மூதாட்டியை தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார். மாவட்ட மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், ஜூலை 17ம் தேதியில் இருந்து இதுவரை 8 முறை ஓநாய் தாக்கியுள்ளது. 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஏற்கனவே 4 ஓநாய்கள் பிடிக்கப்பட்டுள்ளது. மற்ற ஓநாய்களையும் பிடிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.