புதுடெல்லி: உபியில் நேற்று பெய்த பலத்த மழையால் சட்டபேரயை சுற்றி வெள்ளம் சூழ்ந்ததால் எம்எல்ஏக்கள் அவதிக்குள்ளாகினர். உத்தர பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. 2 மணி நேரம் இடைவிடாது பெய்த பலத்த மழையால் லக்னோவில் உள்ள சட்டபேரவை வளாகத்தை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கியது. உபி பேரவையின் மழைக்கால கூட்ட தொடர் நடந்து வரும் நிலையில்,சட்டமன்ற வளாகத்திற்குள் எம்எல்ஏக்கள் வருவதற்கு மிகுந்த சிரமப்பட்டனர். சட்டமன்ற கட்டிடத்தின் வாயில் மற்றும் தரை தளத்தில் தேங்கிய மழை நீரை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
உபியில் பலத்த மழை: பேரவையை வெள்ளம் சூழ்ந்தது
62