முசாபர்நகர்: உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் நேற்று டெல்லி சஹாரன்பூர் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்தது. பால்வா கிராமத்தில் ரயில் சென்றபோது, அங்கு தண்டவாளத்தில் 10 அடி நீள இரும்பு குழாய் இருப்பது தெரிய வந்தது. இதைக்கண்டு உடனே சாதுரியமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் அவசரகால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற ரயில்வே காவல்துறையினர் இரும்பு கம்பியை அகற்றிய பின் ரயில் போக்குவரத்து தொடர்ந்தது. சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “ரயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பியை வைத்த மர்ம நபர்கள் பற்றி விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்றார்.