திருவையாறு, ஜூலை 28: திருவையாறு அருகே திருச்சோற்றுதுறை மேல ஆதிதிராவிடர் தெருவை சேர்த்தவர் ஏகாம்பரம்(57). இவர் டூவீலரில் மீன் வியாபாரம் செய்து வந்தார்.இவருக்கு சந்திரா (50) என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ஏகாம்பரம் வயிற்று வலியால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் (26ம் தேதி) வயிற்று வலி அதிகமானதால் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் ஏகாம்பரத்தின் சடலத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.