புதுடெல்லி: நாடு முழுவதும் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே உறுதிபடுத்தப்பட்ட பென்ஷன் திட்டங்கள் உள்ளன. அமைப்புசாரா தொழிலாளர்கள் எனப்படும் கட்டுமான தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், டெலிவலி பணி செய்பவர்களுக்கு எந்த ஓய்வூதியமும் கிடையாது. இந்நிலையில் அனைத்து சம்பளம் பெறும் ஊழியர்களுக்கும் சுயதொழில் செய்வபவர்களையும் உள்ளிடக்கிய புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளிட்ட எதிலும் இணையாதவர்கள் புதிய பென்ஷன் திட்டத்தின் மூலம் பலன் பெறலாம். இதன் மூலம் ஒவ்வொரு இந்தியனும் பென்ஷன் பெற வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு இந்த திட்டம் கொண்டு வரப்படுகிறது.
இருப்பினும், இந்த புதிய திட்டம் தன்னார்வ அடிப்படையிலானது. இதில் மற்ற திட்டங்களை போல அரசு தரப்பில் எந்த பங்களிப்பும் வழங்கப்படாது என கூறப்படுகிறது. ஏற்கனவே தற்போது நடைமுறையில் உள்ள சில திட்டங்களை இணைத்து இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் முடிந்த பிறகு, பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கேட்கப்படும். தற்போது அமைப்புசாரா தொழிலாளர்களுக்காக அரசு மூலம் செயல்படுத்தும் பல்வேறு பென்ஷன் மற்றும் சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் 60 வயதை எட்டியவர்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரை பென்ஷன் பெறலாம். பிரதம மந்திரி ஷ்ராம் மன்தன் யோஜனா திட்டத்தில் சாலையோர வியாபாரிகள், வீட்டுவேலை செய்பவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டவர்கள் பயன் பெறலாம்.