சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பல மாதங்களாக நியமிக்கப்படவில்லை. தற்போது இந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆளுநருடன் கலந்துபேசி தற்போது காலியாக உள்ள துணை வேந்தர் பதவிகளை உடனடியாக நிரப்பவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.