Tuesday, June 25, 2024
Home » ஊட்டியில் நாளையும், நாளை மறுநாளும் பல்கலை. துணைவேந்தர்கள் மாநாடு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

ஊட்டியில் நாளையும், நாளை மறுநாளும் பல்கலை. துணைவேந்தர்கள் மாநாடு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு

by Ranjith

சென்னை: தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.ரவி, ஒவ்வொரு ஆண்டும் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் இந்த மாநாட்டை நடத்தி இருந்தார். இதில் மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து நடப்பாண்டுக்கான துணைவேந்தர்கள் மாநாட்டை நாளையும் (திங்கட்கிழமை), நாளை மறுதினமும் (செவ்வாய்க்கிழமை) நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடத்த ஆளுநர் ரவி திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழ்நாட்டில் உள்ள 48 மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைகளின் துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்குகிறார்.

மாநாட்டின் தொடக்க அமர்வில் முதன்மை விருந்தினராக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) தலைவர் ஜெகதீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். 2 நாள் மாநாட்டில் எதிர்கால சிறப்பு ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குதல், புதுமை மற்றும் தொழில் முனைவு, தேசிய சிறப்பு கட்டமைப்பின் மூலம் வாழ்நாள் முழுவதும் கற்றலை மேம்படுத்துதல்,

உலகளாவிய மனித வளங்கள், வளர்ந்துவரும் தொழில்துறை தேவைகளுக்கான ஆசிரியர்களின் திறனை உருவாக்குதல் போன்ற தலைப்புகளின் கீழ் அமர்வுகளும், உரையாடல் நிகழ்வுகளும் நடைபெற உள்ளன. இதில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குனர், ஏ.ஐ.சி.டி.இ. தலைவர், ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் உள்பட பலரும் பங்கேற்று பேச இருக்கின்றனர்.

You may also like

Leave a Comment

6 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi