இலங்கை பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் வழங்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு திருமாவளவன் கடிதம்
சென்னை: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு விசிக தலைவர் திருமாவளவன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இந்தியில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவ, மாணவியருக்கு தங்கப் பதக்கம் மற்றும் 25,000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு இவை வழங்கப்படுவதில்லை. இது ஒரு சார்பு உணர்வை உருவாக்குகிறது. எனவே சபரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் தமிழ் கற்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தங்கப் பதக்கம் மற்றும் ரொக்கப் பரிசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


