சென்னை: சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இளநிலை, முதுநிலை, எம்.சி.ஏ., எம்.எஸ்.சி-ஐ.டி, எம்.பி.ஏ. பட்ட, பட்டய படிப்புகளுக்கான டிச.2023 தேர்வு முடிவு நாளை வெளியிடப்பட உள்ளது. www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.