சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தின் 166-வது பட்டமளிப்பு விழா செப்டம்பர் இறுதி வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 50,000 மாணவர்கள் பட்டம் பெறாமல் இருந்த நிலையில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. துணைவேந்தர் இல்லாமலே பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் ரூ.25 செலுத்தி முனைவர் பட்டம் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.