வாஷிங்டன்: இந்திய வம்சாவளியான அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான அதிகாரபூர்வ வேட்பாளராக ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 5ம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்பை துணை அதிபரான கமலா ஹாரிஸ் எதிர்கொள்கிறார்.
ஜனநாயகக் கட்சியின் அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், கமலா ஹாரிஸ் வெளியிட்ட பதிவில், ‘2025ம் ஆண்டிற்கான டிரம்பின் திட்டம் அமெரிக்காவை மீண்டும் இருண்ட கடந்த காலத்திற்கு அழைத்துச் செல்வது தான்; அவர் வெற்றி பெற்றால் நாட்டில் மோசமான பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துவார். பெரும் கோடீஸ்வரர்களுக்கு வரிச் சலுகை அளிப்பார். மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி ெசய்ய மாட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.