பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தள செய்தி தொடர்பாளராக இருந்தவர் ரன்வீர் நந்தன். சட்ட மேலவை உறுப்பினராகவும் உள்ள ரன்வீர் நந்தன், தொடர்ந்து கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வந்தார். அவர் பாஜவில் சேரலாம் என்ற தகவல்கள் பரவின.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் உமேஷ் சிங் குஷ்வாகா வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களுக்கு முரணாக அறிக்கைகள் மற்றும் கருத்துக்களை ரன்வீர் வெளியிட்டு வருகிறார். இதையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு அவர் நீக்கப்படுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.