பெங்களூரு: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய நீர்ப்பாசனத்துறை இணையமைச்சராக பதவியேற்றவர் வி.சோமண்ணா. இவரது மகன் அருண். இவர் மீது பெங்களூரு சஞ்சய் நகர் போலீசில் மாதவராஜ், திருப்தி தம்பதி மோசடி புகார் கொடுத்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது, ‘ 2019ம் ஆண்டு அருண் மற்றும் மாதவராஜ் இணைந்து ஒரு நிறுவனத்தை தொடங்கினர். அதில் நிதி இழப்பு ஏற்பட்டது. அதுதொடர்பாக எனது கணவர் கேட்டதும், அவரை நிறுவனத்திலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றியுள்ளார். எங்களின் பங்கு தொகையை கேட்டால் எனக்கும் எனது கணவருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததுடன், பங்கை 10 சதவீதமாக அருண் குறைத்து பல்வேறு மோசடிகள் செய்ததாக கூறியிருந்தனர். இந்த புகாரின் பேரில் அருண் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர்.
ஒன்றிய அமைச்சர் சோமண்ணா மகன் மீது மோசடி வழக்கு
45
previous post