சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பிறந்த நாளை முன்னிட்டு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தி: உங்கள் பிறந்த நாளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். நாட்டின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் நீண்ட பலனளிக்கும் வாழ்க்கையை கடவுள் உங்களுக்கு வழங்கட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உங்கள் அன்பான வார்த்தைகள் நான் தொடர்ந்து தேசத்திற்கு சேவை செய்ய ஊக்கத்தையும், பலத்தையும் தருகின்றன. உங்கள் ஆசீர்வாதங்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.