புதுடெல்லி: ஒன்றிய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லாவின் பதவி காலம் நிறைவடைந்ததையடுத்து புதிய உள்துறை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி கோவிந்த் மோகனை ஒன்றிய அரசு நியமித்தது. உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் நேற்று தனது பொறுப்பை ஏற்று கொண்டார். கடந்த 1989ம்ஆண்டு சிக்கிம் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான கோவிந்த் மோகன் மாநில அரசு, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன் கலாசார துறை செயலாளராக இருந்தார். அப்போது, இந்தியா சுதந்திரம் பெற்றதன் 75வது ஆண்டு விழா மற்றும் வீட்டு வீடு தேசிய கொடி ஏற்றுதல் போன்ற வெற்றிகரமாக பிரசாரங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். கொரோனாவின் போதும் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும் இவருடைய பங்கு முக்கியமானது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.